தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்..!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ; மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் மல்லாகம் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறாக பொலிசாரினால் கைது செய்யப்படும் போது பொலிசாரினால் கடும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டே கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆண்கள் விடுதி 9 இல் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin