வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு..!

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு..!

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு நேற்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் அரங்கில் நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. அதனை தொடர்ந்து இறை வணக்கம், தலைமையுரை, வரவேற்புரை, விருந்தினர் உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

 

கல்லூரியின் பதில் அதிபர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அதிபர் வதனி தில்லைச்செல்வன் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin