மண்முனை வடக்கில் சர்வதேச முதியோர் வாரம்..!

மண்முனை வடக்கில் சர்வதேச முதியோர் வாரம்..!

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சர்வதேச முதியோர் வார நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இன்று (07) இடம் பெற்றது.

 

மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மண்முனை வடக்கு பிரதேச முதியோர் சம்மேளனமும் இணைந்து “தலைமுறையை வளர்த்த தலைமுறையைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச முதியோர் வார நிகழ்வுகள் நடைபெற்றன.

 

பாரம்பரிய முறையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் முதியோர்களுக்கு பாராட்டும் முகமாக அதிகாரிகளினால் கொரவம் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

 

இதன் போது 100 வயதினை தாண்டிய முதியவர் இருவர் மற்றும் 12 குழந்தைகளை பெற்றெடுத்த தாயினை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதன் போது பிரதேச செயலக பிரிவினில் முதியோர் தொழில் முயற்சியாளர்களின் பொருட் கண்காட்சியும் விற்பனை, சம்பாசனை, விளையாட்டு மற்றும் நடனம் இடம் பெற்றன.

 

இதன் போது கருத்து தெரிவித்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் முதியவர்களின் அனுபவங்கள் எம்மை நல்வழிப்படுத்துகின்றது என்றார்.

 

இந்நிகழ்வில் உதவு பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், மண்முனை வடக்கு நிருவாக உத்தியோகத்தர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சிவநாயகம் சிராணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin