யட்டினுவர பிரதேச சபை SJB உறுப்பினர், மனைவி, மகள் வீட்டில் சடலங்களாக மீட்பு!
கண்டி, இலங்கை – ஜூலை 29, 2025 – யடினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (SJB), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, 52 வயதான உள்ளூர் அரசியல்வாதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. அவரது 44 வயதான மனைவி மற்றும் 17 வயதான மகளின் சடலங்கள் அதே வீட்டின் படுக்கையறைகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து பேராதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மரணத்திற்கான முழுமையான சூழ்நிலைகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

