அந்தமான் – நிக்கோபார் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை
கொழும்பு, இலங்கை – ஜூலை 29, 2025 – இன்று காலை (ஜூலை 29) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய தேசிய புவியியல் மையத்தின்படி, நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர் எனப் பதிவாகியுள்ளது.
முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சக்திவாய்ந்த பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன. எனினும், எந்தவிதமான சொத்து சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (GSMB) பணிப்பாளர் நாயகம் திருமதி. தீபானி வீரகோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

