சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்க விசேட குழு: இலங்கை சுங்கத் திணைக்களம் அதிரடி!

கடன்பத்திரங்கள் (Letters of Credit) மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, இறுதி சுங்க அனுமதியை (Customs Clearance) பெற முடியாமல் நீண்டகாலமாக சிக்கியுள்ள வாகனங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது.

சுங்க ஊடகப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா இது குறித்துத் தெரிவிக்கையில், இந்த விசேட குழுவின் நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விரிவாக மீளாய்வு செய்து, அவற்றுக்கு பொருத்தமான மற்றும் முறையான தீர்வுகளைப் பரிந்துரைப்பதே, இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரதான பணியாகும்.

வாகன இறக்குமதியாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் களைந்து, இணக்கமான தீர்வொன்றை எட்டுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: admin