தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ரேவதியின் கணவர் தொடர்பான உண்மைகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என தனது நடிப்பு திறமையினால் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ரேவதி. இவர் நடிப்பில் மாத்திரமன்றி பரதநாட்டிய கலையிலும் தேர்ச்சிப் பெற்றவராக காணப்பட்டார்.
இவர் முதல் முதலில் பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டவர்.
இதனை தொடர்ந்து ஒரு கைதியின் டைரி, மௌன ராகம், மறுபடியும், அஞ்சலி போன்ற வெற்றி படங்களில் தனது நடிப்பு திறனைக்காட்டியுள்ளார்.
விவாகரத்திற்கான காரணம்
ரேவதி “மருமகள்” திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் சந்திர மேனன் என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
சுரேஷ் சந்திர மேனன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், திரைப்பட நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் என ரேவதியை போன்று இவரும் பல்கலை வித்துவான்.
இவர் 1993 -ம் ஆண்டு புதிய முகம் திரைப்படத்தினை தானே இயக்கி, நடித்ததன் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் தற்போது ரேவதியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
ரேவதியின் குழந்தை
2018ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தனக்கு 5 வயதில் குழந்தை இருப்பதாகவும் அவருக்கு மஹி என பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அக் குழந்தை டெஸ்ட் டியூப் மூலம் பெற்ற குழந்தை என்றும் அறிவித்திருந்தார்.