I D M நிறுவனத்தினால் நடாத்தப் பட்ட தொழில் வழிகாட்டல் செயலமர்வு மன்னாரில்!

இலங்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணை குழுவினால்அங்கீகரிக்கப்பட்ட. பல்கலைக்கழகங்களில் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டால், இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும்,வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம் என I D M Nation Campus நிறுவனத்தின் வட பிராந்திய இயக்குநர் அன்ரூ அனஸ்லி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியிலான தொழில் போக்கு தொடர்பான தொழில் வழிகாட்டல்செயலமர்வு

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (10.01.) வெள்ளிக்கிழமை காலை,இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

“கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தினைப் (O/L)பூர்த்தி செய்துவிட்டு,கல்விப்  பொதுத் தராதர உயர்தரத்தினைக் கற்றுக் கொண்டிருக்கும்போதே பட்டப்படிப்பு ஒன்றனைத்  தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனால், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர  (O/L)பரீட்சை எழுதிய மாணவர்கள் கூட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.”என்றார்.

I D M Nation Campus International நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தத் தொழில் வழிகாட்டல் செயலமர்வில்,

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எழுதி, பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும்  மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI