இலுப்பைக்கடவை விவசாயிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற  அறுவடை விழா(video)

மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில்  விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழாவான அறுவடை விழா இன்று(9)  வியாழன் காலை  11:30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது கமக்கார அமைப்பின் உறுப்பினர்களால் பொங்கல் வைத்து மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இலுப்பை  கடவை கமக்கார அமைப்பின் தலைவர் வி எஸ் சிவகரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர். க. கனகேஸ்வரன் கலந்துகொண்டு தமிழர்  பாரம்பரிய பண்பாட்டு முறைப்படி முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின் குமார்,மாவட்ட விவசாய பணிப்பாளர்  அ.சகிலா பானு,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் ,விவசாய அமைப்பின்  உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட  மழை வெள்ளத்தின் நிமித்தம் விவசாயிகள் முற்றாக பாதிக்கப்பட்ட  போதிலும்  இப்பகுதியில் நெல்  விளைச்சல் வெற்றியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI