இன்றைய ராசிபலன் 03.01.2025

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி தரும். எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும், அதை சுலபமாக முடித்து தருவீர்கள். உழைப்பு மட்டும்தான் இன்று உங்களுடைய மூலதனமாக இருக்கும். வியர்வை சிந்தி உழைக்கும் அத்தனை மக்களுக்கும் இன்று நல்லது நடக்கும். முயற்சிகள் வீண் போகாது. சந்தோஷத்தை கொண்டாடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நினைத்த காரியங்கள் எல்லாம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உற்சாகம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பெரிசாக நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த நாளை சுறுசுறுப்பாக துவங்குவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். உங்களை வீழ்த்த நினைப்பவர்களை அடையாளம் கண்டு கொண்டு, அவர்களிடம் இருந்து விலகி நிற்பீர்கள். எதிரி தொல்லை விலகும். சந்தோஷம் பிறக்கும். சின்ன சின்ன கடன் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தனலாபம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலைமை உயரும். சேமிப்பு அதிகரிக்கும்‌ நிறைய செலவுகளை எதிர்கொண்ட சூழ்நிலையில் ஒரு ரொக்கம் உங்களுடைய கையை வந்து சேரும். மனதிருப்தியை கொடுக்கும். சந்தோஷத்தை அனுபவிக்கலாம். –

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். உங்களை நீங்களே பொது பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சில பேருக்கு மனதிற்கு பிடித்த கோவிலுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். ஜாக்கிரதையாக இருங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். செய்யாமல் பெண்டிங்கில் போட்டு வைத்திருந்த வேலைகளை எல்லாம் கடகடவென எடுத்து முடித்து, நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன எதிரி தொல்லை இருக்கும். அவ்வப்போது வாக்குவாதம் சண்டைகள் வரவும் வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடனே ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனைகள் வந்து தொற்றிக் கொள்ளும். அதை எப்படி கழட்டி விடுவது என்று தெரியாமல் கஷ்டப்படுவீர்கள். பிரச்சனை எந்த ரூபத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. மூன்றாவது நபர்களின் விஷயத்தில் நீங்கள் தலையிடாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வெளிநாட்டில் இருந்தவர்கள் தங்களுடைய சொந்த பந்தங்களை பார்ப்பதற்கு தாய்நாடு திரும்புவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான போக்காக தான் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக இருந்தாலும், உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்வீர்கள். இன்றைக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று டார்கெட் வைத்து செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருப்பீர்கள். கொஞ்சம் உடல் அசதி, கொஞ்சம் தூக்கம் உங்களுடைய சுறுசுறுப்பை குறைக்கும். கவலை படாதீங்க இறைவழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கிடைக்கும். அதாவது சுப காரிய நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். காதல் கைகூடவும் வாய்ப்புகள் இருக்கிறது. பெற்றவர்களிடம் உங்கள் காதலை சொல்ல சிறப்பான நாளாக இருக்கும். வேலை தொழிலில் எல்லாம் கூடுதல் அக்கறை இருக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று அனாவசியமாக அடுத்தவர்களை நம்பாதீர்கள். உங்களுடைய பர்சனல் விஷயங்களை ஒளிவு மறைவு இல்லாமல் வெளி ஆட்கள் இடம் சொல்லக் கூடாது. கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சில இடங்களில் பொய் பேசி தான் ஆக வேண்டும். அப்போதுதான் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். ரொம்பவும் வெளிப்படையாக இருக்காதீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று தர்ப்புகழ்ச்சி அதிகமாக இருக்கும். உங்களைப் பற்றி நீங்களே பெருமை பேசிக்கொள்வீர்கள். ஆனால் அது உங்களுக்கு பெருமையாக இருந்தாலும், அடுத்தவர்கள் கண்களுக்கு பொறாமையாக மாறிவிடும். கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல விஷயங்கள் நடக்கும் போது அடக்கமாக இருந்து கொள்ளுங்கள். இன்று அந்த அடக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

Recommended For You

About the Author: admin