மேஷம்
திட்டமிட்ட காரியங்களை தடங்கல் இன்றி நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரத்திற்குத் தேவையான உதவிகளை தேடிப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் ஏற்றம் காண்பீர்கள். பெரியோர்கள் ஆசியால் பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி பெறுவீர்கள். வேலை இடங்களில் சுமூகமாக பணி செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 9 7 6 1
ரிஷபம்
கைப்பொருட்கள் களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசாங்கக் காரியங்களில் இடையூறுகள் வந்து இம்சைப்படுவீர்கள். ஒருவர் உதவியால் அதைச் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் சின்னச்சின்ன பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையுடன் படித்து ஏற்றம் பெறுவீர்கள். அரசாங்க ஊழியர்கள் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சந்திராஷ்டமம். வார்த்தையை அளந்து பேசுங்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 6 1 2 9
மிதுனம்
அழகாக பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். அப்படி கொடுத்தால் சாட்சி வைத்துக் கொள்ள தவறாதீர்கள். வியாபாரத்திற்காக செல்லும் வெளியூர் பயணத்தில் அதிக பலன் அடைய மாட்டீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். . அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 5 9 4 3
கடகம்
மனதில் நினைத்த காரியம் எளிதில் ஈடேறி மகிழ்ச்சி அடைவீர்கள். மங்கல நிகழ்ச்சியால் வீட்டை கலகலப்பாக மாற்றுவீர்கள். வயதான பெற்றோர்களிடம் வாயார வாழ்த்து பெறுவீர்கள். பிள்ளைகளின் நடத்தையால் மனம் குளிர்ந்து போவீர்கள். வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு அலைச்சலைக் குறைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 2 3 8 5
சிம்மம்
ஆடல் பாடல் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக ஆசை கொள்வீர்கள். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாவீர்கள். ஆனால் உங்களின் விடாமுயற்சியால் வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். சொந்த முயற்சியில் புதிய தொழில்களில் தடம் பதிப்பீர்கள். சிறு வியாபாரிகள் சிரத்தையுடன் உழைத்து சிறப்பான லாபம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 1 7 6
கன்னி
வாக்குக் கொடுத்தால் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் தலைகுனிவு அடைவீர்கள். என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் சின்னச் சின்ன தொல்லைகளால் சிரமப்படுவீர்கள். அதேநேரத்தில் மனைவி மக்கள் ஆதரவால் மன நிம்மதி அடைவீர்கள். வங்கிகளுக்கு செல்லும்போது பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ள மறக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 5 1 2 9
துலாம்
எந்தக் காரியத்தை தொட்டாலும் தடையின்றி முன்னேறிச் செல்வீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத ஏற்றம் பெறுவீர்கள். வாகனங்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து அனைவரையும் பூரிக்க வைப்பீர்கள். அக்கறையுடன் வேலைசெய்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நிலம் வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை. அதிர்ஷ்ட எண்: 6 9 4 3
விருச்சிகம்
உங்கள் முயற்சிகள் முளைவிட்டு மரமாகி நல்ல கனிகளைக் கொடுக்கும். கையில் காசு பணம் தாராளமாகப் புரளும். ஓடி வந்து உதவி செய்யும் நண்பர்களை மறக்காதீர்கள். விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அரசியல்வாதிகளின் அன்பைப் பெறுவீர்கள். எங்கு சென்றாலும் புகழும் செல்வாக்கும் அடைவீர்கள். தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம். அதிர்ஷ்ட எண்: 9 3 8 5
தனுசு
அனாவசிய செலவுகள் வந்து அவதிப்படுவீர்கள். இருப்பினும் அதனால் உங்களின் செல்வாக்கு உயர்வதை காண்பீர்கள். இந்த நாளில் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். பங்குச் சந்தையில் சரிவைச் சந்திப்பீர்கள். உறவினர்களால் பல நன்மைகள் அடைவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடப்பதால் அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு. அதிஷ்ட எண்: 3 7 6 1
மகரம்
பூரண சந்திரனின் பலனை ஓரளவு பெறுவீர்கள். உடல்ரீதியான உபாதைகளை எதிர்நோக்குவீர்கள். மருத்துவச் செலவுகள் வரும். பெற்றோர்களால் மனச் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். கொடுத்த இடத்தில் குறித்த நேரத்தில் பணம் திரும்பி வராததால் சிரமத்தை எதிர் நோக்குவீர்கள். வம்பு வழக்குகளால் காவல் நிலையம் செல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு. அதிர்ஷ்ட எண்: 8 1 2 9
கும்பம்
மனைவி மனம் கோணாமல் நடந்து கொள்வதால் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். சிறிய விபத்தால் காயமடைவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். திடீர்ச் செலவால் பணத் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவீர்கள். கவனக்குறைவால் பணம் இழப்புக்கு ஆளாவீர்கள். காதலியின் பேச்சால் எரிச்சல் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 8 9 4 3
மீனம்
வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் கேட்ட தொகையை அனுப்பி வைப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமையை நீக்கி உறவை பலப்படுத்துவீர்கள். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். வெளிநாட்டு பயணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள். அதற்காக நண்பரின் உதவியை நாடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்: 3 8 5