கொள்வனவு செய்த அரிசியை இன்று முதல் வழங்க அரசாங்கம் உத்தரவு.

லக் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக இலங்கைக்கு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்ட அரிசி விநியோகம் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக கொள்வனவு செய்யப்பட்ட அரிசி 780 மெற்றிக் தொன் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

லக் சதொச ஊடாக 200 மெற்றிக் தொன் அரிசி விற்பனை செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 26000 மெற்றிக் தொன் அரிசியை கொள்வனவு செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (31) நண்பகல் 12 மணிவரை துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்டு வெளியேறிய மொத்த அரிசியின் அளவு 79,000 மெற்றிக் தொன் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

31,000 தொன் பச்சை அரிசியும் , 48,000 தொன் புழுங்கல் அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

இதேவேளை, தனியார் துறையினரால் ஆர்டர் செய்யப்பட்ட 80,000 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI