மணமகன் அல்லது மணமகள் தேவை என்ற விளம்பரம் சமூக வலைத்தளம் முதல், இடைத்தரகர்கள், செய்தித்தாள் மூலம் விளம்பரம், மேட்ரிமோனி இணைதளம் என பல்வேறு வழிமுறைகளில் விரிவடைந்துள்ளது.
அந்த வகையில், மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதற்கு முக்கிய காரணமே பெண் வீட்டார் தரப்பில் மணப்பெண்ணுக்கு யார் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்பதை தெரிவித்த விதம் ஆகும்.
அந்த விளம்பரத்தின்படி சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து போன் செய்யவேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 24 வயதான எம்.பி.ஏ. படித்துள்ள அழகான பணக்காரக தொழில் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ், டாக்டர், தொழிலதிபர் மணமகன் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.