வவுனியா ஏ9 வீதி சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்தை அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக வவுனியா நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.