நான்கு வயது சிறுமி: மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், எம்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் – லாவண்யா தம்பதியின் மகள் பிரஹர்ஷிகா.

நான்கு வயதான இவர் வெளியில் சென்ற தாய் வீட்டுக்கு வந்ததைக் கண்ட மகிழ்ச்சியில் அம்மா என அழைத்தவாறு அவரை நோக்கி ஓடிச் சென்றுள்ளார்.

அப்போது வழியிலேயே வீட்டின் வாசற்படியில் குறித்த சிறுமி திடீரென சரிந்து விழுந்துள்ளார்.

இதைப் பார்த்த லாவண்யா, மகளை ஓடிச் சென்று தூக்கியபோது, தாயிடம் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து, உடனே சிறுமியை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin