தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று மாலை வெளியிடப்பட்டது.
அந்தக் கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
இதன்போது, கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுபபினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின்
பிரசாரச் செயலாளர் நடராஜர் காண்டீபன், சிரேஷ்ட சட்டத்தரணியும்,
கடசியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான கனகரட்ணம் சுகாஷ், வேட்பாளர்களான வாசுகி சுதாகர், க. ஞானகுணேஸ்வரி, ஜீன்சியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்