எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் ஊஞ்சல் சின்னத்தில் சுயேச்சை குழு 2 இல் போட்டியிடும் சட்டத்தரணி ஈ. எஸ். பி. நாகரத்தினம் கமலரூபன் காரைநகரில் விளையாட்டுக் கழக வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின் போது விளையாட்டுக் கழக வீரர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், இடர்பாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளை எட்டுவதற்கான வழிவகைகள் சம்பந்தமாகவும் சட்டத்தரணி கமலரூபன் கலந்துரையாடினார்.
அத்துடன் தனது அரசியல் பிரவேசத்திற்கான காரணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் வீரர்களுக்கு விளக்கமளித்தார்.