01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க.
02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக.
03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக.
04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக.
05. 2016 உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று 2008 இன் புதிய வழிபாட்டிடங்கள் அமைத்தல் தொடர்பான விதியைச் சட்டமாக நாடாளுமன்றத்தில் இயற்றுக.
06. அரசு சார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி வரவு விவரம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அரச நடு வங்கிக்குப் பட்டியலாகத் தரும் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக.
– இவ்வாறு இலங்கை சிவசேனையின் தொண்டன் பாலசிங்கம் ஜயமாறன் தெரிவித்துள்ளார்.
பாலசிங்கம் ஜயமாறன் சுயேட்சைக்குழு – 12 இல் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஆமை சின்னத்தில் இலக்கம் 4 இல் போட்டியிடுகிறார்.
வெல்வோம்
வெல்வோம்
சைவத்
தமிழ்த் தேசியம்
நாளை நமதே,
ஆறும் நமதே