அரசியல் தொடர்பான கேள்விகளைக் கேட்காதீர்கள்! -நடிகர் ரஜினிகாந்த்

“தன்னிடம் அரசியல் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம்” என நடிகர் ரஜினிகாந்த் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

விஜயவாடாவில் ‘கூலி’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை , சென்னை விமான நிலையத்தில் வைத்து சந்தித்த ஊடகவியலாளர்கள் ” அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என பரவும் செய்தியை எப்படி பார்க்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன்போதே நடிகர் ரஜினிகாந்த், தன்னிடம் அரசியல் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம் எனப் பதிலளித்தார்.

இதனையடுத்து வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் எனக் கேட்கப்பட்டபோது” அது குறித்து தனக்கு தெரியாது எனவும், வேட்டையன் திரைப்படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin