முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கான அழைப்பிதழ் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் கிடைத்துள்ளது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் (12) திருமணம் நடைபெறுகிறது.
திருமண விழா ஜியோ உலக மாநாட்டு மைய வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த திருமணத்தில் உலக பிரபலங்கள், உலக பணக்காரர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையிலேயே நாமல் ராஜபக்சவுக்கும் அழைப்பிதல் கிடைத்துள்ளது. இந்த விழாவுக்கு நாமல் ராஜபக்ச சென்றுள்ளதான புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
உலக பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி 9ஆவது இடத்தில் இருக்கிறார்.
இதேவேளை, ஆனந்த் அம்பானியின் திருமண விழாவை இந்தியா முழுவதும் உள்ள முகேஷ் அம்பானியின் நிறுவன ஊழியர்களும் அவரை விரும்பும் மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதற்கான நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.