தற்போதைய பொருளாதார நிலை காரணமாக இலங்கையில் புதிய கடன் (LoC) திட்டங்களை இந்தியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது வலுவாக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு இருதரப்பு கடன் வழங்கும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தியா மற்றும் பிற நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பை இலங்கை சமீபத்தில் நிறைவு செய்தது.
கடன் வழங்குவதற்குப் பதிலாக, மானியத் திட்டங்கள் மற்றும் இணைப்புத் திட்டங்கள் போன்ற முதலீட்டு அடிப்படையிலான திட்டங்களில் இந்தியா கவனம் செலுத்தும் என அறியக்கிடைத்துள்ளது.
மாஹோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான இலங்கை ரயில்வேக்கான சமிக்ஞைகளை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் இயக்குதல் போன்ற தற்போதைய கடன் திட்டங்களில் முதன்மையானது ஆகும். அதற்கான செலவு 14.90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானத்தால் இதுபோன்ற செயல் திட்டங்கள் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
இந்தியாவும் காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தியை ஒரு உதவித் திட்டமாக மாற்றியுள்ளது.
இதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா முன்பு கடனாக அறிவித்தது. தற்போது அது மானியமாக மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, பொருளாதார நெருக்கடியால் முடங்கிய 11 ஜப்பானிய திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்று ஜப்பான் அறிவித்தது. எனினும் நாட்டின் நிலைமை திருப்திகரமாக மேம்படும் வரை புதிய யென் கடன்கள் அனுமதிக்கப்படாது எனவும் கூறியுள்ளது.