காதலில் விழுந்த நிவேதா தோமஸ்

குழந்தைகள் விரும்பி பார்த்த மை டியூர் பூதம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நிவேதா தோமஸ்.

அதன் பின்னர் விஜய்யின் குருவி திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படியே படிப்படியாக கதாநாயகியாக வளர்ந்துவிட்டார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறிருக்க நடிகை நிவேதா, அவரது சமூக வலைத்தளத்தில் ‘It’s been a while…but. Finally’ என்றொரு பதிவை பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவை சிவப்பு இதயக் குறியீட்டுடன் பதிவிட்டுள்ளதால், இவர் யாரையோ காதலித்து வருகிறார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin