வருண் – நடாஷா தம்பதிக்கு அழகிய குழந்தை பிறந்தது

நடிகர் வருண் தவானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார்.

பல வெற்றி படங்களில் நடித்த வருண் தவான் ஜனவரி 24 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டில் அவரது தோழி மற்றும் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்துக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வருண் தவான் அப்பா ஆக போகிறார் என்ற செய்தியை இணையத்தில் பதிவிட்டார் .

நேற்று வருண் தவான் மற்றும் நடாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வருண் தற்பொழுது அட்லி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin