தனுஷின் விவாகரத்து குறித்து இரகசியத்தை வெளியிட்ட சுசித்ரா

‘ப்ராங் செய்வதாக கூறி எனது டுவிட்டர் தளத்தின் பாஸ்வேர்டை வாங்கிகொண்டார் என்னுடைய முன்னாள் கணவர் (கார்த்திக்குமார்).

நடிகர் தனுஷ், நடிகை ஆன்ரியா மற்றும் எனது முன்னாள் கணவரும் இணைந்து தான் சுசிலீக்ஸ்சை ஆரம்பித்தனர்.

இதனை அடிப்படையாக கொண்டு, ப்ராங் செய்வதாக கூறிய விடயங்கள் அனைத்தும் என் வாழ்க்கையையே திருப்பி போட்டுவிட்டது. இதற்கு முழு காரணமும் தனுஷ் தான்!

பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லாத பாடகி மற்றும் வானொலிகளில் பிரபலமான தொகுப்பாளினியுமான சுசித்ரா தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

மேலும் குறித்த நேர்காணலில்,

தனுஷ் – ஐஸ்வர்யா திருமண வாழ்க்கையில் எப்படி இத்தனை வருடம் சேர்ந்து வாழ்ந்தார்களோ தெரியவில்லை. தனுஷை எனக்கு பிடிக்காது. அவர் மீது கோபம், வன்மம் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த தந்தை. அவரின் மகன்களுக்கு சிறந்த தந்தையாக அவர் இருந்து வருகின்றார்.

ஆனால், ஐஸ்வர்யா அப்படி இல்லை. அவர் ஒரு சிறந்த தாய் கிடையாது. அவர் தன் மகன்களுக்காக எதுவும் செய்தது கிடையாது. தன்னை ப்ரமோட் செய்வதில் மட்டும் தான் கவனம் செலுத்துவார். இதை தனுஷ் கூட சொல்லியிருக்கின்றார்.

இந்த விடயம் சினிமா துறையில் அனைவருக்கும் தெரியும். மேலும், அவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்து கொண்டவர்கள் தான்.

அவர்கள் திருமணம் ஆகியும் இரகசியமாக பலருடன் டேட் செய்கிறார்கள். இதனால் தான் தனுஷ், ஐஸ்வர்யாவை பிரிந்தார். ஒரு திருமண உறவில் இருந்து கொண்டு இவ்வாறு செய்வது சரியா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மேலும், என்னுடைய பிரச்சினைகளை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டேன். என கண்ணீர் தான் இன்று தனுஷின் குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாவதற்கு காரணம். கடவுள் இருக்கின்றார். அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றார்.

நிகழ்ச்சி தொகுப்பாளரை வெளுத்து வாங்கும் ஊடகவாசிகள்

இந்த நேர்காணலானது சமூக வலைத்தளத்தில் வைரலானாலும் இதனை பார்ப்பவர்கள் சாதக பாதகமான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மேலும், நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பும் பிரபல தொகுப்பாளரை மிகவும் மோசமான கேள்விகளை முன்வைப்பதாகவும் விமர்ச்சித்துள்ளனர்.

நேர்காணல் செய்வதற்கு பல முறைகள் இருந்தாலும் இது தவறான ஒரு முறை எனவும் திட்டித் தீர்த்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin