தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சகோதரனை, காதலனுடன் சேர்ந்து சகோதரி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, திருச்சூர் மாவட்டம் வஞ்சிக்கடவு பகுதியைச் சேர்ந்த 45 வயதான சந்தோஷ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
சந்தோஷை அவரது சகோதரியான ஷீபா கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஷீபாவுக்கும் செபாஸ்டின் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது.
சந்தோஷ், ஷீபா, செபாஸ்டின் ஆகிய மூவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரது தகாத உறவுக்கும் இடைஞ்சலாக இருந்த சந்தோஷை கடந்த 05ஆம் திகதி ஷீபாவும், செபாஸ்டினும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு இயற்கையான மரணம் ஏற்பட்டுவிட்டது என இருவரும் நாடகமாடியுள்ளனர்.
விடயம் கேள்விப்பட்டு அங்கு கூடிய பொதுமக்கள், சந்தோஷின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களைப் பார்த்து சந்தேகித்து புதுக்காடு பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
பொலிஸார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிஸாரின் தீவிர விசாரணைக்குப் பயந்து செபஸ்டின் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், ஷீபா, செபாஸ்டின் இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கொலை செய்த விடயம் தெரிய வந்துள்ளது.
சந்தோஷை கொலை செய்த குற்றத்துக்காக ஷீபா மற்றும் செபாஸ்டினை பொலிஸார் கைது செய்தனர்