மேஷம்:
வணிகர்கள் வியாபாரத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். பொருளாதார விஷயங்களில் உங்களின் கவனத்தை இன்று அதிகப்படுத்துங்கள், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக செயல்பாடுகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுங்கள்
இன்று உங்கள் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் செய்வோர் மற்றும் ஊழியர்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்ற முயற்சிககளை இன்று அதிகரிக்க வேண்டும். தேவையை கட்டுப்படுத்தி, சிக்கனத்தை கடைபிடியுங்கள்
பரிகாரம்: கோசாலைக்கு சென்று சேவை செய்யுங்கள்
இன்றைய நாள் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல செயல்திறனை பேண வேண்டும். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். சுறுசுறுப்பாக இருக்கும் அதே நேரம் இன்று நீங்கள் விதிகளை பின்பற்ற மறக்காதீர்கள். கடின உழைப்பால் உங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்குவீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
பரிகாரம்: உண்ண கூடிய மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்
அதிர்ஷ்டம் இன்று உங்கள் பக்கம் இருக்கும், இதனால் நீங்கள் நினைத்தபடி அனைத்து வேலைகளும் நிறைவேறும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்களில் இன்று சாதகமான முடிவுகளைப் பெறலாம். வணிகர்களுக்கு இன்று வியாபாரம் வேகமெடுக்கும். உங்களை சுற்றி இருக்கும் அனைவரின் ஆதரவும் இருக்கும். வேலையில்லாதவர்கள் இன்று புதிய வாய்ப்புகளை பெறுவார்கள்.
பரிகாரம்: பரிகாரம்: பைரவர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்
நீங்கள் செய்யும் கடின வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் மேம்படும், வெற்றி உண்டாகும். உத்யயோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். வேலையில் கவனம் அதிகரிக்கும். புதிய திட்டங்களில் சிறப்பாக செயல்பட உங்களின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு தண்ணீர் வைத்து வழிபடுங்கள்
குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடைபெறும். புதிய நிலம் அல்லது கட்டிடம், வாகனம் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். இன்று அதிகப்படியான உற்சாகம் ஆர்வத்தை தவிர்க்கவும். எதிலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். உங்களின் தனிப்பட்ட நடத்தையில் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்
உங்களின் புதிய முயற்சிகள் இன்று சிறப்பான பலன்களை கொடுக்க கூடியதாக இருக்கும். பொருளாதார விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெருங்கி நம்பர்களை நீண்ட நாட்களுக்கு பின் இன்று சந்திப்பீர்கள். அவர்களுடன் வெளியே செல்வீர்கள். வணிகர்களுக்கு தொழிலில் லாப வாய்ப்புகள் இருக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள்
உங்கள் வாழ்வில் இன்று ஒரு புதிய ஆரம்பம் இருக்கலாம். முக்கிய முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும். நேர்மறை எண்ணம் அதிகரிக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்.
பரிகாரம்: ஓம் நம சிவாயை மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்
உங்களின் வேகம் இன்று குறைவாக இருக்கலாம். இதனால் வேலைகள் பாதிக்கப்படலாம். உறவுகளை சிறப்பாக வைத்திருக்கவும், அனைவரையும் இணைக்கவும் இன்று முயற்சிப்பீர்கள். இதற்கான ஒத்துழைப்பு குடும்பத்தில் இருக்கும். பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுங்கள்.
பரிகாரம்: ராமரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்
சமூக சேவைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வணிகர்கள் லாபத்தை அதிகரிக்கும் புதிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெரியவர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் ஆலோசனைகள் இன்று உங்களுக்கு பலனளிக்கும். புதிய முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் நிலத்தில் முதலீடு செய்வது லாபத்தை தரும்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்
உங்களின் வெற்றி சதவீதம் இன்று அதிகரிக்கும். வணிகர்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் போட்டி உணர்வு இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்படும் முக்கிய வேலைகளை விரைந்து முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றவும்
சுப காரியங்களில் இன்று உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும் அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் நல்லுறவு மற்றும் தொடர்பை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் வலுவாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பொருளாதார விஷயங்கள் வேகம் பெறும்.
பரிகாரம்: பெரியவர்களின் ஆசிர்வாதம் பெற்று வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்