ரெஸ்லா வாகனங்களுக்கு புதிய மென்பொருளினை பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து ஏற்படும் வீதத்தினைக் குறைக்கும் வகையில் புதிய தொழிநுட்பத்தினை வாகனங்களில் உட்செலுத்தவுள்ளதாக சீன சந்தையின் ஒழுங்குபடுத்தல் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் புதிய தொழிநுட்பம் சுமார் 8700 வாகனங்களுக்குப் பொருத்தப்படவுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட 1071 எஸ் ரக வாகனங்கள் மற்றும் எக்ஸ் ரக 7629 வாகனங்களுக்கும் இவ்வாறு புதிய மென்பொருள் உட்செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை இத்தகைய மென்பொருள் சாரதிகளுக்கு அவசியம் தேவை எனவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்