பாகிஸ்தானில் முதல் பெண் முதல்வா்

பாகிஸ்தானில் 12 கோடி மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் பொறுப்பேற்க உள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8ஆம் திகதி தோ்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலுடன் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்றது.

பஞ்சாப் மாகாண பேரவைக்கு தெரிவாகியுள்ள மரியம் நவாஸ் மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தோ்தலில் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு அதிகபட்சமாக 137 இடங்கள் கிடைத்தன.

முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 116 இடங்களைக் கைப்பற்றி 2ஆவது இடத்தைப் பிடித்தனா்.

முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (பிபிபி) 10 இடங்கள் கிடைத்தன.

இந்தச் சூழலில், பிபிபி மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் பிஎம்எல்-என் கட்சி புதிய அரசை அமைக்கவிருக்கிறது. அந்த அரசில், கட்சியின் முதுநிலை துணைத் தலைவா் மரியம் நவாஸ் முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறாா்.

பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக ஒரு பெண் பொறுப்பேற்கவிருப்பது இதுவே முதல்முறையாகும்.

Recommended For You

About the Author: admin