வடகொரியாவுக்கும் விஜயம் செய்யும் ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின்,வடகொரியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன் ஹுய்வை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரச ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன் ஹுய் கடந்த வாரம் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இதன்போது வடகொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு தமக்கு அழைப்பு விடுத்த வடகொரியத் ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கு புடின் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பல வருடங்களுக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி ஒருவர் வடகொரியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், ஜனாதிபதி புடின், வடகொரியாவுக்கு விஜயம் செய்வதை எதிர்பார்த்து காத்திருப்பதாக மொஸ்கோவின் கிரம்ளின் மாளிகையின் பேச்சாளர் கடந்த 15 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

ரஷ்ய ஜனாதிபதி எந்த நேரத்திலும் வடகொரியாவுக்கு விஜயம் செய்யலாம் என திகதி எதுவும் இறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் புடின் மிக விரைவில் வடகொரியாவுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது

Recommended For You

About the Author: admin