வெப்ப அலையால் அவதியுறும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் பெரிய பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (21) வெப்ப அலையில் மூழ்கின.

எல் நினோ வானிலைக்கு மத்தியில் இது காட்டுத் தீ பரவும் ஆபாயத்தை தூண்டிவிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதிக அளவிலான வெப்ப அலை எச்சரிக்கைகள், மேற்கு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாகவும் அமுலில் இருந்தன.

மேலும் அந்த வெப்ப அலை எச்சரிக்கை தெற்கு அவுஸ்திரேலியாவுக்கும் நீட்டிக்கப்பட்டது.

அதேநேரத்தில் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் வடக்குப் பகுதிகளில் ஆகியவையும் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கைகளில் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான மேற்கு அவுஸ்திரேலியாவின், தொலைதூர பில்பரா மற்றும் காஸ்கோய்ன் பகுதிளின் வெப்பநிலை இன்று 40 டிகிரி செல்சியஸைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.

மாநிலத் தலைநகர் பெர்த்திற்கு வடக்கே சுமார் 1,500 கி.மீ தொலைவில் உள்ள பில்பரா சுரங்க நகரமான பரபர்டூவில், அதிகபட்ச வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் அங்கு 31.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.

அவுஸ்திரேலியாவின் அதிகபட்ச வெப்பநிலையான 50.7 டிகிரி செல்சியஸ் 2022 ஜனவரி 13 அன்று பில்பராவின் ஆன்ஸ்லோ விமான நிலைய பகுதியில் பதிவு செய்யப்பட்டது.

கிழக்கு கடற்கரையில், நியூ சவுத் வேல்ஸின் தலைநகரான சிட்னியின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பமான, வறண்ட நிலைமைகள் சில பகுதிகளில் காட்டுத்தீ அபாயத்தை உயர்த்தியதாக வானிலை நிலைய அதிகாரிகள் கூறினர்.

அவுஸ்திரேலியா எல் நினோ வானிலை நிகழ்வினால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இது பொதுவாக காட்டுத்தீ, சூறாவளி மற்றும் வறட்சி போன்ற தீவிர நிகழ்வுகளை அங்கு ஏற்படுத்துகிறது

Recommended For You

About the Author: admin