இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், தலைமைப் பதவிக்கு போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டால் ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.