அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருவதுடன் நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான நியூ ஜெர்சியில் பனிப்புயல் வீசி வருகிறது.
இந்த குளிர்காலப் பனிப்புயல் காரணமாக நெடுஞ்சாலைகளில் உறைப்பனி நிறைந்து காணப்படுகின்றன.
மேலும் வீதியில் பயணிக்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
சில பகுதிகளின் வீதிகளில் 2 முதல் 6 அங்குலம் வரை பனிப்பொழிவு காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
நியூ ஜெர்சியைத் தவிர, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. வீதிகளில் பனி படர்ந்துள்ளதால், அவசர ஆம்புலன்ஸ்கள் வண்டிக் கூட சென்று வர முடியாத நிலைமை காணப்படுகிறது.
பனிப்புயல் காரணமாக விமானங்கள், ரயில்கள் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க காலநிலை திணைக்களம் வெளியிடுள்ள அறிக்கையின்படி பல பகுதிகளில் 4 முதல் 12 அங்குல பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.