சிவில் உடையில் போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்

சிவில் உடையில் போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நட்ட ஈட்டினையும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வழங்கிவைத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin