தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் பாலியல் தொழிலை சட்டமாக்க எதிர்பார்க்கவில்லை எனவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக அந்த தொழிலில் ஈடுபடுவோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் சில சட்டங்கள் திருத்தப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பொருளாதார கஷ்டங்கள் காரணமாக பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதால், நாட்டின் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே தேசிய மக்கள் சக்தி பிரதான பணியாக இருக்கும்.
சில சட்டங்கள் காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்படியான நிலைமையை போக்கி, பெண்களின் உரிமைகளை பாதுகாக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.
சுரண்டல்களுக்கு உள்ளாகும் பாலியல் தொழிலாளிகள், சில சட்டங்கள் காரணமாக மேலும் தொந்தரவுகளுக்கு உள்ளாகி வருகின்றனர் எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் தொழிலை சட்டமாக்குவது சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமன்மலி குணசிங்க வெளியிட்டிருந்த கருத்து குறித்து ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்தி, அவரது கருத்துக்களில் சில பகுதிகள் மட்டுமே,அவரது முழு உரையிலும் சரியான கருத்துக்கள் இருப்பதாகவும் ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.