தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்து, அவர்களுடன் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அதன் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பான மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.