தமிழ் மக்களின் இருப்பை அழித்து ஜனநாயகத்தை மறுக்கும் வகையில் செயற்பட்டு வருபவரே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மட்க்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மாவட்ட அமைப்பாள் உள்ளிட்டவர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை அரசின் உண்மை முகம் தற்போது வெளிவந்துள்ளது. இரட்டை வேடத்தில் செயற்படுகின்றனர்.
ஒருபுறம் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறவாம் என அனுமதி வழங்குகின்றனர். மறுபுறம் நினைவுகூர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
இது இலங்கை அரசின் மனித உரிமை மீறல் செயற்பாடாகும். இதனை மார்ச் மாதம் இடம்பெறும் ஜெனீவா பேரவையில் அம்பலப்படுத்தவுள்ளோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக வேண்டும் என்பதே ரணிலின் கனவு. ஆனால் இந்த கனவு சாத்திமற்றது.
ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற தெற்கு மக்களின் ஆதரவு மாத்திரம் ரணிலுக்கு போதாது. அதன்காரணமாகவே
தமிழ் மக்களை ஏமாற்றும் விதத்திலேயே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்திருந்தார்.
தமிழ் தரப்பினரின் ஆதரவினை பெறவேண்டும் என்பதே அவரின் நோக்கம்.
மீண்டும் எமக்கள் ஏமாற மாட்டார்கள்.
கிழக்கில் திருகோணமலை நகரில் வாழ்கின்ற 90 வீதமான தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டமாக மெகா சிற்றி என்ற திட்டத்தினை ரணில் விக்கிரமசிங்கவே முன்னெடுத்தார்.
இதன்காரணமாக திருகோணமலையில் தமிழர்களுடைய இருப்பு பறிபோயுள்ளது.
பதவிக்கு வந்து இரண்டரை வருடத்தில் கோத்தாவை விடவும் கொடிய ஆட்சியை மக்களுக்கு வழங்கிவருகின்றார் என்பது நிருபனனமாகியுள்ளது.” என தெரிவித்தார்.