மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொழும்பு ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்ந சிலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் துமிந்த சில்வா, கடந்த 20 மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மருத்துவர்களின் பரிந்துரைகள் மீண்டும் கிடைக்கப்பெற்றால், அவர் வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு சட்டவிரோதமானது எனவும், அவருக்கு மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் நேற்று சிறப்பு தீர்பொன்றை அளித்துள்ள பின்புலத்திலேயே துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.