விஜயகாந்த் மகனுடன் இணைந்து நடிக்க தயார் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு!

கேப்டன் விஜயகாந்தின் மகனுடன் இணைந்து நடிக்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளமை இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தேமுக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறிது நாட்களுக்கு முன்பு காலமானார். இவரது இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பலருக்கும் பல உதவிகளை கேட்காமல் செய்துள்ளவர் விஜயகாந்த். இவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அவரது கோயம்பேடு அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பல சினிமா நட்சத்திரங்கள் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் தானும் இணைந்து நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளமை தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது.

Recommended For You

About the Author: webeditor