ஜனாதிபதி ரணில் சுவிஸ் உகண்டா செல்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆரம்பமாகவுள்ள 54ஆவது பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி சுவிஸ் செல்ல உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் அறிய முடிகிறது.

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, பிளவுபடாத நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி உகாண்டாவில் செல்லவுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி பிளவுபடாத நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு உண்டாவில் ஆரம்பமாக உள்ளதுடன், 20ஆம் திகதிவரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த விஜயத்தில் ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் பல அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Recommended For You

About the Author: admin