வடக்கு கிழக்கில் நீடிக்கும் மழை

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை மேரும் இரு நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை வரை மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளது.

எனவே வடக்கு கிழக்கில் தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் 2023/2024 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வடகீழ் பருவத்தின் இறுதிச் சுற்று மழை இதனோடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஜனவரி இறுதிவரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்க கூடும்.

தற்போது பெய்துவரும் மழை குறைவடைந்ததும், பனியுடனான காலநிலை தொடரும் என்பதனால் சற்று குளிரான வானிலை தொடரக்கூடும் எனவும் யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin