மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி திட்டம்: சி.வி. விக்னேஸ்வரன் சாடல்

பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருக்கலாம் என தமிழ்மக்கள் தேசிய கூட்டாணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை ஒரு காரணமாக சுட்டிக்காட்ட முடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

தமிழ் மக்களின் நடத்தைகளை ஆராயும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விஜயத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பொதுப் பணத்தை வீணடித்து இந்த நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தென்னிலங்கையில் உள்ள சில தரப்பினர் குறிப்பிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது அரசியல் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவதாக கூறிய ஜனாதிபதி, வடக்கிற்கான விஜயத்தின் போது பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தியமை வருத்தமளிக்கின்றது.

எனினும், ஜனாதிபதி இதுவரை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதிய வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கியுள்ளார் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin