பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் ஷகிப் வெற்றி

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் நேற்று இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஷாகிப் அல் ஹசன், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். இவர் 1,50,000 மேலதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று அணிகளுக்கும் ஷாகிப் அல் ஹசன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இதேவேளை, பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஷேக் ஹசீனா, 5ஆவது முறையாகவும் பங்களாதேஷின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin