மோடியை விமர்சித்ததன் எதிரொலி மாலைத்தீவின் அரசு இணையதளங்கள் முடங்கின

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த தீவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தீவின் அழகான, தூய்மையான கடற்கரை பகுதிகளின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதனால் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் மாலைத்தீவு அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிராக மாலைத்தீவு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அவதூறாக விமர்சித்தனர். இந்த சூழலில் மாலைத்தீவின் அரசு இணையதளங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் மாலைத்தீவு வெளியுறவுத்துறை, சுற்றுலா துறை இணையதளங்கள் முழுமையாக முடங்கின. மாலைத்தீவு அரசின் பெரும்பாலான இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மாலைத்தீவு அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

பிரதமர் மோடியை மாலைத்தீவு அமைச்சர்கள் விமர்சித்தமைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்திய பைசர் தேர்ச்சியாளர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடியை “கோமாளி”, “பயங்கரவாதி” மற்றும் “இஸ்ரேலின் கைப்பாவை” என மாலைத்தீவின் அமைச்சர்கள் விமர்சித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin