ஸ்பா (SPA) எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் மசாஜ் நிலையங்களில் சுமார் 50 ஆயிரம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் சுமார் 6,000 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த மசாஜ் நிலையங்கள் ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.