தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வது என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது “X“ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
”தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைத்தால் அவர்கள் சர்வதேச இறையாண்மை பத்திர கடனை செலுத்தமாட்டார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார வல்லுனர்களின் அறிக்கைகள் மற்றும் கருத்துகளின் பிரகாரம் கடனைப் பராமரித்துச் செல்லும் அறிவு அவர்களுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்த கருத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைமை பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்திருந்தார். இதனையே மீண்டும் கட்சியின் உயர்மட்ட பொருளாதார நிபுணர் சுனில் ஹந்துன்நெத்தியும் தெளிவாக கூறியுள்ளார்.
இவர்களது கருத்துகள் மூலம் தேசிய கடன்களை கையாளும் திறன் இல்லை என்பது புலப்படுகிறது. அவர்களது தலைமையின் கீழ் மோசமான நிலைக்கே நாடு செல்லும்.” எனவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.