பிரித்தானிய குட்டி இளவரசர், இளவரசியின் புதிய புகைப்படங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பிரித்தானியாவின் சாண்ட்ரிங்ஹாமில் உள்ள செயின்ட் மேரி மாக்டலீன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனையில் மன்னர் சார்லஸ், ராணி கமீலா மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை ஜோஷ் ஷின்னர் என்ற புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார்.

கருப்பு, வெள்ளை நிறத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் குட்டி இளவரசர் ஜோர்ஜ் (10), குட்டி இளவரசி சார்லோட் (8), குட்டி இளவரசர் லூயிஸ் (5) ஆகிய மூவரும் மிக அழகாக காட்சியளிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin