கத்தாரில் டிராம் சேவைகள் இயங்கும் பகுதிகளில் சாரதிகளுக்கான புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய போக்குவரத்து சட்ட இலக்கம் 19/2026 இன் கீழ், டிராமின் பின்னால் பயணிக்கும் வாகனங்கள் குறைந்தபட்சம் 5 மீற்றர் இடைவெளியைப் பேண வேண்டும்.
டிராமை காரணமின்றி முந்திச் செல்வது, அதன் முன்னால் தேவையின்றி வேகத்தைக் குறைப்பது அல்லது நிறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்விதிகளை மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 20,000 ரியால் அபராதம் விதிக்கப்படலாம்.
டிராம் பாதைகளில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் மற்றும் வாகனம் இழுத்துச் செல்லப்படும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம்.

