வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்தினால் 90 நாட்கள் வாகனம் பறிமுதல்! – கத்தாரில் புதிய சட்டம்

கத்தாரில் நெடுஞ்சாலைகளில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயிக்கும் புதிய திட்டத்தின் முதல் கட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான போக்குவரத்து அறிவிப்புப் பலகைகள் அடுத்த சில நாட்களில் வீதிகளில் நிறுவப்படவுள்ளதாக போக்குவரத்து திணைக்களப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஜப்ர் அலி அல்-குபைசி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பயன்படுத்துவது உள்ளிட்ட சாரதியின் கவனத்தை திசைதிருப்பும் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
புதிய போக்குவரத்து சட்டத்தின் கீழ், இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை அதிகபட்சமாக 90 நாட்கள் வரை பறிமுதல் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வீதிப் பாதுகாப்பை அதிகரித்து விபத்துகளைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்

Recommended For You

About the Author: admin