நடிகை ரம்பா தனது மகனின் 5வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா திடீரென்று இலங்கையரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
ரம்பாவின் கணவர் மூலம் யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நொதேர்ன் யுனியின் அனுசரனையில் எதிர்வரும் பெப்ரவரி 09ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கை வந்திருக்கும் ரம்பா தனது மகனின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது.