$2.5 பில்லியனுக்கு ஆளில்லா விமானங்களை வாங்க கனடா முடிவு

கனேடிய ராணுவத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை வாங்க $2.5 பில்லியன் பணம் செலவிடப்பட்டுள்ளது.

அதன்படி 11 ரிமோட் பைலட் விமானங்கள் அல்லது ட்ரோன்களை அமெரிக்காவை தளமாகக் கொண்ட General Atomics மூலம் வாங்கப்படும் என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முதல் ட்ரோன் 2028 ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்படும் என்று தேசிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டமானது 2033 இல் முழுமையாக செயல்படும்.

General Atomics உடனான ட்ரோன் ஒப்பந்தம், கனேடிய தொழில்துறையில் ஆண்டுதோறும் 700 வேலைகளை உருவாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin